பாகிஸ்தானை மிரட்டினாரா ஹிலாரி: அமெரிக்கா மழுப்பல்
பாகிஸ்தானை மிரட்டினாரா ஹிலாரி: அமெரிக்கா மழுப்பல்
பாகிஸ்தானை மிரட்டினாரா ஹிலாரி: அமெரிக்கா மழுப்பல்
ADDED : மே 12, 2010 04:38 AM

வாஷிங்டன்:பாகிஸ்தானை மிரட்டும் தொனியில் ஹிலாரி பேசவில்லை, என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஷசாத், சமீபத்தில் காரில் குண்டு வைத்து விட்டு துபாய்க்கு தப்பி செல்ல விமானநிலையம் சென்ற போது போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிடுகையில், "நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்ட கார் குண்டு வெடித்து பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் அதற்கு காரணமான நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்திருக்கும்' என தெரிவித்தார்.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பி.ஜெ.க்ரோலே குறிப்பிடுகையில், "ஹிலாரி எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு இந்த கருத்தை தெரிவிக்கவில்லை' என்றார்.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்ப்ரூக் குறிப்பிடுகையில், "ஹிலாரியிடம் பேட்டியெடுத்த செய்தி நிறுவனம், பேட்டியின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டுள்ளது. எனவே, அவர் சொன்ன விஷயத்தின் அர்த்தம் மாறுபட்டுள்ளது' என்றார்.